fbpx

வேலைக்காக விண்ணப்பம் செய்ய போன பெண்ணிற்கு நடந்த அக்கிரமம்… கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி..!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் திருமணமான பெண் சத்துணவு பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அந்த கிராமத்தில் இருக்கும் பொது சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பொது சேவை மையத்தின் ஆப்பரேட்டர், அங்கு வேலை பார்த்து வரும் கணினி ஆப்பரேட்டர், கடைக்கு‌சொந்தக்காரர் உட்பட நான்கு பேர் அந்த பெண்ணை அங்கு வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி நடந்துள்ளது. இதை தொடர்ந்து, அவர்கள் அந்த பாலியல் வன்கொடுமை வீடியோவை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றவாளிகள் மூன்று பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரில் முக்கிய குற்றவாளியும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒன்றாக படித்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Rupa

Next Post

விடுதியில் 12ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை..! வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்..! போலீசார் குவிப்பு..!

Sun Aug 7 , 2022
அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பரமானந்தல் அடுத்த தொட்டிமடுவு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (17). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதியில் தங்கி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் […]

You May Like