கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறது இந்த சோதனை இன்று 3வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் சோதனை நடந்து வருகின்ற நிலையில், கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பிளாட் ஒன்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் ஹரி என்ற நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. அதாவது, அந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் சக தொழிலாளர்கள் தண்ணீர் எடுப்பதற்காக தொட்டியில் இருந்த டியூபை எடுத்துள்ளனர். டியூபை வெளியே எடுக்கும் போது மிகவும் கடினமாக இருந்ததால் 2 தொழிலாளர்கள் சேர்ந்து இழுத்துள்ளனர் அப்போது தண்ணீர் தொட்டிக்குள் சக தொழிலாளியான ஹரி விழுந்து உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த கட்டிட தொழிலாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன கூலி தொழிலாளியாக மாநிலத்தைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக இந்த கட்டிடத்தில் கட்டிடப் பணியை செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இரவு கட்டிட பணியை முடித்துவிட்டு அந்த கட்டிடத்தின் முன்பு இருக்கின்ற தண்ணீர் தொட்டி அருகில் அமர்ந்து அவர் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது.
அப்போது மது போதையின் உச்சத்தில் இருந்த அவர், போதையில் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது தமிழக தமிழ்நாடு முழுவதிலும் இந்த ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்ற நிலையில், அந்த அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பிளாட்டில் ஒரு தொழிலாளி உயிரிழந்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.