fbpx

போன் செய்து சொல்லி விட்டு… குடும்பத்துடன் கிணற்றில் குதித்த விவசாயி.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(39). இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி சுரேகா (36). இவர்களுக்கு திருமணமாகி யோகிதா(16) என்ற ஒரு மகளும், மோகனன் (11) ஒரு மகனும் உள்ளனர். யோகிதா மதுரையில் இருக்கும் பெண்கள் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். மகன் பாலமேட்டில் இருக்கும் ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

முருகன் தனது குடும்பத்துடன் குலமங்கலம் அருகில் இருக்கும் ஒரு கொய்யா தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கேயே வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து, குடும்பத்துடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தங்களை மீட்டு அடக்கம் செய்து விடுங்கள் என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக கூறுகின்றனர். அந்த உறவினர் உடனடியாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் அந்தத் தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் பார்த்தபோது குடும்பத்தினர் அனைவரும் கிணற்றில் மிதந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அலங்காநல்லூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினர்.

முருகனின், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இறந்து விட, கழுத்து அறுக்கப்பட்டு கணவர் முருகன் மட்டும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் சரக டி.எஸ்.பி பாலசுந்தரம் மற்றும் காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா..? ரயில்வே விளக்கம்..

Thu Aug 18 , 2022
1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று வெளியான தகவல் தவறானது என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது.. ரயிலில் 1 முதல் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்று ரயில்வே உத்தரவிட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.. இதற்காக டிக்கெட் விதிமுறைகளை ரயில்வே மாற்றி அமைத்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்நிலையில் இதுகுறித்து ரயில்வே விளக்கமளித்துள்ளது.. 1 முதல் 4 வயதுக்கு […]

You May Like