திமுக கவுன்சிலர் கணவர் வெட்டி கொலை குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு…!

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மகாராஜாபுரத்தில் வசித்து வருபவர் சரவணகுமார். இவர் இன்று காலை எட்டு மணிக்கு டீ குடிப்பதற்காக டீ கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், சரவணகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சரவணகுமார் உயிரிழந்தார்.

இது குறித்து குரும்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பாலாஜி சரவணன் மற்றும் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சரவணகுமாரின் மனைவி மரிய நிர்மலா தேவி, ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்தில் 14வது வார்டு கவுன்சிலராக, சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்று பின்னர் திமுகவில் இணைந்துள்ளார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2019 ஆம் வருடம் நவம்பரில் சரவணகுமாரின் தம்பி குமாரை சிலர் கொலை செய்துள்ளனர். இதுவும் இவரது கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம், என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Baskar

Next Post

’சிறைகளில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்கள்தான் அதிகம்’..! உச்சநீதிமன்றம்

Tue Jul 12 , 2022
நாட்டில் உள்ள சிறைகளில் மூன்றில் 2 பங்கு கைதிகள் விசாரணைக் கைதிகளாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக விசாரணை அமைப்புகளுக்கும், துணை நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவுகளில், ”ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அரசு நடைபெற்று வருகிறது என்ற எண்ணம் ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது. ஜாமீன் வழங்குவதை முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய […]
மருமகனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையில் இருந்து காப்பாற்றிய மாமியார்..! எப்படி தெரியுமா?

You May Like