கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு காரணம் கடந்த 2019 ஆம் ஆண்டு சீன நாட்டின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தான்.
இந்த வைரஸ் பரவல் காரணமாக, சற்றேற குறைய 2 ஆண்டுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்ற வருடம் வழக்கம்போல தேர்வு நடைபெற்றது. ஆனால் பாடத்திட்ட அளவுகள் குறைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வருடம் அப்படி எந்தவித சலுகையும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் மிக விரைவில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த வருடத்திற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத இருக்கிறார்கள். அடுத்த மாதம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில், தான் 2ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் நாளைய தினம் வெளியாக இருக்கிறது. நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வு துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக தேர்வு துறை அறிவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த கல்வி வருடத்திற்கான 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.