விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் வசித்து வரும் சரத்குமார் என்பவரின் மனைவி பரணி. இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக வரும் நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் இருந்து வருகிறார்.
அவருடைய கணவர் 2 நாட்களுக்கு முன்னால் விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தகைய நிலையில், அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த சரத்குமாரின் மனைவி பரணியிடம் சரத்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பரணியை கழுத்து மற்றும் கைப்பகுதியில் வெட்டியுள்ளார் சரத்குமார். இதனால் பலத்த காயமடைந்த பரணி அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மருத்துவமனையின் சக ஊழியர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில், பரணியின் கணவர் சரத்குமாரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றன. அந்த விசாரணையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை 2 தினங்களாக மனைவி பார்க்க வராததால் ஆத்திரத்தில் கணவர் மனைவியை தாக்கியதாக தெரியவந்துள்ளது.