fbpx

திருவிழாவிற்கு வந்த இடத்தில் மனைவி செய்த வேலையால்.. அதிர்ச்சி அடைந்த கணவன்…!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகில் உள்ள விண்ணுவாம்பட்டு பகுதியில் குடியிருப்பவர் ஜெயக்குமார். இவர் பெங்களுருவில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஜெயக்குமாருக்கு கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் பூவரசி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுங்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜெயக்குமார் குடும்பத்துடன் பெங்களுரில் வசித்து வந்தார். இந்த நிலையில், கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக ஜெயக்குமார், மனைவி மற்றும் மகளுடன் விண்ணுவாம்பட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு ஜெயக்குமாரின் மனைவி பூவரசி வீட்டில் தூக்குபொட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பூவரசியின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி கலசப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், ஜெயக்குமார் தனது மகளிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் பூவரசியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி இரண்டரை ஆண்டுகளில் பூவரசி இறந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு  வருகிறார்.

Rupa

Next Post

’மாணவர்கள் என்ற போர்வையில் சில விஷமிகளால் வன்முறை’..! அமைச்சர் எ.வ.வேலு

Mon Jul 18 , 2022
தமிழக அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தவே சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவரது குடும்பத்தினரை அரசு சார்பில் யாரும் சந்திக்கவில்லை என்று கூறுவது தவறான தகவல் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், வன்முறையில் பள்ளி பேருந்துகள் உட்பட மொத்தம் […]
கனியாமூர் கலவரத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு எவ்வளவு..? வெளியானது முழு விவரம்..!

You May Like