மனைவி குளிக்கும் காட்சியை ஊருக்கே விருந்தாக்கிய கணவன்.. அழைத்துச் சென்று விருந்து வைத்த காவல்துறை…!

மும்பையில் மனைவி குளித்ததை வீடியோ எடுத்து அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்த ஒருவரை சார் கைது செய்துள்ளனர் குரார் கிராமத்தை சேர்ந்த 28 வயதான பெண் 2015 ஆம் ஆண்டு பிவாண்டியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்தின் போது பெண்ணின் தந்தை கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் மேலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்புள்ள நகைகளை பெண்ணிற்கு கொடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் மாப்பிள்ளை வீட்டார் மேலும் வரதட்சனை கேட்டு அந்த பெண்ணை துன்புறுத்தி வந்துள்ளனர். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் மனம்முடைந்த அந்த பெண் கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கணவர் வீட்டின் மீது குடும்ப வன்முறை வழக்கையும், அந்த பெண் பதிவு செய்தார். இதனால் அவரது கணவர் வழக்கை திரும்ப பெறும்படி அவரை வற்புறுத்தினார். இதற்கிடையில் போன வருடம் ஜனவரி மாதம் தானேவில் இருவரும் ஒன்றாக தங்கி இருந்தபோது அந்த பெண் குளிப்பதை அவரது கணவர் வீடியோ எடுத்ததாகவும், சில மாதங்களுக்கு முன் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியவுடன், அவர் திரும்பி வரவில்லை என்றால் வீடியோவை பரப்பி விடுவேன் என்று பாதிக்கப்பட்ட பெணை அவரது கணவர் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை தனது சகோதரியின் கணவரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் சகோதரி குளித்துக் கொண்டிருக்கும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார். அவரது கணவரின் மீது குரார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாக மாமியார் உட்பட எட்டு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

முக்கிய அரசியல் தலைவரின் மனைவி காலமானார்.. தலைவர்கள் இரங்கல்...

Sat Jul 9 , 2022
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா இன்று காலமானார். உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங்கின் மனைவி சாதனா குப்தா நுரையீரல் தொற்று காரணமாக குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக ஐசியூவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ […]

You May Like