போலீசார்விருத்தாசலம், மங்கலம்பேட்டை அருகில் இருக்கும் விஜயமாநகரம் கிராமத்தில் வசித்து வரும் அண்ணாமலை மகள் கார்த்திகா (19). இவர் சேலம் அருகில் இருக்கும் தாராமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் முதலாம் வருடம் படித்து வருகிறார். கிருத்திகாவும், விஜயமாநகரம் பகுதியில் உள்ள ஞானசேகர் மகன் பிரசாந்த் குமார் (25) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கிருத்திகாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் பேசி பிரசாந்த்குமார் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இந்நிலையில் பிரசாந்த்குமாருக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இது தெரிந்த கார்த்திகா பிரசாந் குமாரிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால் பிரசாந்குமார் திருமணம் செய்து கொள்ள மறுத்து தனது பெற்றோருடன் சேர்ந்து மிரட்டி இருக்கிறார். எனவே கார்த்திகா விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இருவரும் காதலித்ததை உறுதி செய்த காவல்துறையினர், இதை தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் அழைத்து பேச்சி வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்த காவல்துறையினர், தொடர்ந்து மகளிர் காவல் நிலையம் எதிரே உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோயிலில், இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். கோவிலில் இருவரும் மாலை மாற்றி, கார்த்திகாவின் கழுத்தில் பிரசாந்த்குமார் தாலி கட்டினார். தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அவர்களை வாழ்த்தினர்.