fbpx

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை 4 கோடி.. சுகாதாரத்துறை இணை அமைச்சர் தகவல்..!

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது, ஜூலை 18-ஆம் தேதி வரை, அரசு தடுப்பூசி மையங்களில் மொத்தம் 1,78,38,52,566 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு இலவசமாக போடப்பட்டுள்ளது.

இது 97.34 % ஆகும். சுமார் நான்கு கோடி பேர் ஒரு தவணை கூட தடுப்பூசி போடவில்லை.. மார்ச் 16-ஆம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்பட்டுவருகிறது. 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு, ஏப்ரல் 10-ஆம் தேதியிலிருந்து பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு தடுப்பூசி மையங்களில் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் சிறப்பு முகாம் அமைக்கப்படடுள்ளது என்று அவர் கூறினார். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் 98 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 90 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுள்ளனர்.

Rupa

Next Post

உள்ளாட்சித்துறை காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்..? அமைச்சர் கே.என்.நேரு பதில்..!

Fri Jul 22 , 2022
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற மண்டல ஆய்வுக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் முதல் பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் 75 சதவீதம் மக்களுக்கு பணியாற்றும் துறையாக நகராட்சி நிர்வாகத் துறை […]
’முதல்வரிடம் நல்ல பெயர் வாங்க அமைச்சர்களுக்குள் போட்டி’..! - அமைச்சர் கே.என்.நேரு

You May Like