fbpx

ட்விட்டர் மூலமாக புகாரளித்த நபர்…..! இரண்டே நாளில் குறையை நீக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…..!

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ஆண்டு கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்று தெரிவித்திருந்தார். அதோடு அடுத்த 3 மாதத்திற்கு தேவையான மின்சாரத்திற்காக டெண்டர் கோரப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.

பொதுவாக கோடை காலம் என்று வந்துவிட்டாலே தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகம் இருப்பதால் அவ்வபோது மின்தடை உண்டாகும் இடம் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாளர்கள் அதிக வெயிலின் காரணமாக, ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் இருக்கும். ஆனால் கோடைகாலத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நிலையில், மின்சாரம் குறித்து ட்விட்டரில் பயனர்கள் வழங்கும் புகார்களை கவனித்து அதன் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி .அதன்படி குமரேசன் என்பவர் தன்னுடைய கிராமத்தில் இரவு சமயத்தில் சரியாக மின்சாரம் கிடைக்கவில்லை என்று புகார் வழங்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் அமைச்சர் இதற்கு பதில் அளித்துள்ளார். இதில் தங்களுடைய குறைபாடு சரி செய்யப்பட்டு விட்டது புகார்கள் இருந்தால் எல்லோரும் தெரிவிக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Next Post

கடைசி ஓவரில் திக் திக்!... CSK-வை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி திரில் வெற்றி!

Mon May 1 , 2023
ஐபிஎல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்வாட் – டெவோன் கான்வே ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9 ஓவர்கள் […]

You May Like