தான் கதலித்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்ததால் மனமுடைந்த காதலன் திருமண மண்டபத்திற்கு வந்து தன்னுடைய காதலியின் கண் எதிரே பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார்.
ஐதராபாத்தில், தன்னுடைய காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறுவதால் அதிர்ச்சியடைந்த காதலன், தன்னுடைய காதலிக்கு திருமணம் நடைபெறும், திருமண மண்டபத்திற்கு வந்து தீ குளித்தார். இது பற்றி காவல்துறையினர் நேற்று கூறியதாவது, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞன்(20) ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கும் வெறொருவருக்கும் கடந்த 30 ஆம் தேதி திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன் மனமுடைந்த நிலையில், தனது காதலிக்கு திருமணம் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்த திருமண மண்டபத்திற்கு வந்துள்ளார். பின்னர், தனது காதலியின் கண்முன்னே தான் கொண்டுவந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி அந்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.
கல்யாண மண்டபத்தில் இளைஞர் தீக்குளித்ததை கண்ட மணமகள் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் செய்வதறியாது திகைத்தனர். பிறகு அங்கிருந்தவர்கள் வேகமாக செயல்பட்டு இளைஞனின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். தீக்குளித்ததால் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு அருகில் உள்ள ஹாஸ்பிடலில் சேர்த்தனர் ஆனால் கடுகாயமுடன் மிகவும் மோசமான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட அந்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீக்குளித்து உயிரிழந்த காதலன் மற்றும் வெறொருவரை, திருமணம் செய்துகொண்ட அவரின் காதலியின் பெயர் விவகரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.