fbpx

மகளுக்கு 2வது திருமணம் செய்ய முயன்ற தந்தையை கொடூரமாக கொலை செய்த மருமகன்!

பொதுவாக காதல் என்றாலே பெற்றோர்கள் அதற்கு எதிரி என்று தான் தற்போதைய இளம் தலைமுறையினர் நினைத்து வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் இடத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் அவர்கள் இருக்கும் மனநிலை எல்லோருக்கும் நன்றாக புரிவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெண் பிள்ளையை பெற்ற நபர்கள் தன் கண் முன்னால் கஷ்டமோ, நஷ்டமோ நம்முடைய அரவணைப்பில் வளர்ந்த, நம்முடைய பெண் யார் என்று தெரியாத ஒருவரை நம்பி சென்று நாளை ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அந்த பிரச்சனையை நம்முடைய பிள்ளை எப்படி சமாளிக்கும் என்று ஒருவித அக்கறையுடன் காதல் தேவை இல்லை என்று பெற்றோர்கள் அறிவுரை வழங்குவார்கள்.

ஆனால் பெற்றோர்களின் அறிவுரையை பொறுமையாக கேட்குமளவிற்கு தற்போதைய இளம் தலைமுறையினரிடையே பொறுமை இல்லை. காரணம் தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு வித கர்வம் தான் இப்படி வயதில் மூத்தவர்களின் பேச்சை அலட்சியப்படுத்த வைக்கிறது.

ஆனால் பெற்றோர்களின் பேச்சை மீறி காதலித்த அந்த நபரை கரம் பிடிக்கும் பல பெண்கள் பிற்காலத்தில் மொத்த வாழ்க்கையையும் இழந்துவிட்டு அதே பெற்றோர்களிடம் தான் வந்து விழுகிறார்கள்.

அதுபோன்ற ஒரு சம்பவம் மதுரையில் நடைபெற்றுள்ளது. மதுரை எப் எப் ரோடு தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகள் நாகரத்தினம். இவர் பிரபாகரன் என்ற நபரை 7வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஆத்விக் என்ற இரண்டரை வயது ஆண் குழந்தையும் இருக்கிறது.

இந்த நிலையில் தான் நாகரத்தினம் மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோரிடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. அதோடு இவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நாகரத்தினத்திற்கும், பிரபாகரனுக்கும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது. இதற்கு நடுவே நாகரத்தினத்திற்கும், தமிழ் என்ற நபருக்கும் மறுமணம் செய்வதற்கு நாகரத்தினத்தின் தந்தை பாலசுப்ரமணியன் முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.

ஆகவே நேற்று காலை விவாகரத்து வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்திற்கு வருகை தந்த பாலசுப்பிரமணியன் மற்றும் அவருடைய மகள் நாகரத்தினம் குழந்தை ஆத்விக் உள்ளிட்டோருடன் மறுமணம் செய்வதாக இருந்த தமிழ் என்பவரும் வருகை தந்துள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த பாலசுப்ரமணியனின் மருமகனான பிரபாகரன் அவருடைய நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நேற்று இரவு சாலையில் போய்க்கொண்டிருந்த தன்னுடைய மாமனார் பாலசுப்பிரமணியத்தை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இரும்புக்கம்பியால் தலையில் அடித்து விட்டு தப்பி ஓடி விட்டார்கள். இந்த சம்பவத்தால் பலத்த காயமடைந்த பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார்.

இதனையடுத்து இது தொடர்பான தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரை தெற்கு காவல் நிலைய காவலர்கள் பாலசுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையை தொடர்ந்து பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினர் வழங்கிய புகாரினடிப்படையில், அவருடைய மருமகன் பிரபாகரன் மற்றும் அவருடைய நண்பர்களான மகாலிங்கம், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். மருமகன் மாமனாரை அடித்து கொலை செய்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

2-வது மனைவியை கொலை செய்ய விஷப்பாம்பை பெட்ரூமுக்குள் விட்ட கணவன்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Tue Dec 13 , 2022
மனைவியை கொலை செய்ய கணவன் ஏவிவிட்ட விஷப் பாம்பு, 2 முறை கடித்தும் உயிர் பிழைத்த அதிசயம் மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலம் மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம். இவருடைய மனைவி சானுபி. இவர் மோஜிமிடம் சண்டைப் போட்டுக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து, அஜ்மேரி ஹலிமா என்ற பெண்ணை மோஜிம் 2-வது திருமணம் செய்து கொண்டார். திடீரென மனம் மாறிய முதல் மனைவி மீண்டும் திரும்பி […]

You May Like