திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரில் வசித்து வருபவர் விஜயன். இவரது மகன் விஷ்ணு (26). இவர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் முத்தனின் (38) கோழியை விஷ்ணுவின் நாய் கடித்துள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முத்து என் கோழியை உன் நாய்தான் கடித்தது என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஷ்ணுவை சராமரியாக குத்தியுள்ளார். இதில் விஷ்னு பலத்த காயமடைந்தார்.
அவரை உடனே நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு விஷ்னு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விஷ்னுவை கொலை செய்த முத்தனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.