தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே இருக்கின்ற கூத்தூர் காலனி தெருவில் பிரவீன்குமார் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் வயிற்று வலியின் காரணமாக, பாதிக்கப்பட்டு அதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆனாலும் அவருடைய வயிற்று வலி குணமாவதாக தெரியவில்லை.
இதனால் மனமுடைந்து போன அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது தொடர்பாக இளைஞர் பிரவீன் குமாரின் தந்தை தங்கராஜ் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வயிற்று வலி தாங்க முடியாமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.