fbpx

கள்ள காதலுக்கு தடையாக இருந்த கணவரின் மண்டையை.. குக்கரால் உடைத்த மனைவி..!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் மதுரவாடாவில், முரளி என்பவர் கடந்த பத்து வருடங்களுக்கு முன் ஸ்ரீகா குளம் மாவட்டத்தினை சேர்ந்த மிருந்துளா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.  முரளிக்கு தென்னாபிரிக்காவில் பேராசிரியர் வேலை கிடைத்ததால் மனைவி, மகனை பிரிந்து சென்று விட்டார். வீட்டில் மகனுடன் தனியாக வசித்து வந்த மிருதுளாவுக்கு,  சங்கர் என்ற 18 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் கள்ள உறவாக மாறி உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி தென்னாப்பிரிக்காவில் இருந்து முரளி ஊர் திரும்பி உள்ளார்.   வெளிநாட்டிலிருந்து வந்திருந்த முரளியிடம் மனைவி மிருதுளா நெருக்கம் காட்டவே இல்லை.  இதனால் மனைவியின் நடத்தையில் முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 16-ஆம் தேதி தனது தாயை பார்க்க சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் மிருதுளா தனது கள்ளக்காதலனை அழைத்து, முரளி வந்த விஷயத்தை கூறி என் கணவர் 60 நாட்கள் விசாகப்பட்டினத்தில் இருப்பார் . அதனால் 60 நாட்கள் நாம் சந்திக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்.

அப்போது எரிச்சலான அந்த இளைஞர், முரளியை தீர்த்து கட்டி விடலாம் எல்லா பிரச்சினையும் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். இதற்கு மிருதுளாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படியே முரளி இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது குக்கரை எடுத்து வந்து முரளி தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் கள்ளக்காதலனுடன் வயல் வெளியில் சடலத்தை வீசி விட்டு வந்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த இளைஞர்ருடன் கணவனை தூக்கிப்போட்ட இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்திருக்கிறது. அந்த உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்நிலையில் தனது மகனை காணவில்லை என்று முரளியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மிருதுளாவிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியதில், கள்ளக்காதலுக்காக இந்த கொலையை செய்ததை ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

Rupa

Next Post

இந்தியாவில் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்கள் எத்தனை கோடி பேர் தெரியுமா..?

Sat Jul 23 , 2022
இந்தியாவில் 4 கோடி பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. கொரோனா நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.. இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி முதல், இந்தியாவில் 18 வயதுகு மேற்பட்ட அனைவருக்கும் […]

You May Like