சென்னை ஆவடியை அடுத்துள்ள திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், அபிராமி தம்பதியினர் இருவரும் பொறியியல் படித்துள்ள நிலையில், பிரவீன் குமார் வளசரவாக்கம் பகுதியில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்னால் தான் திருமணம் ஆகியிருக்கிறது. 1 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இவர்களுடைய வீடு 2 மாடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பாகும். ஆகவே இருவரும் இரவு சமயத்தில் மாடிக்கு சென்று உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். வழக்கம் போல நேற்று முன்தினமும் இருவரும் மாடியில் அமர்ந்த உரையாடிக் கொண்டிருந்தார்கள். அபிராமி மாடியில் கைப்பிடி சுவற்றின் மீது அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், திடீரென்று அபிராமி நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலை மற்றும் உடல் பகுதிகளில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடம் முழுவதிலும் ரத்தம் ஆறாக ஓடியது. இதனால் பதறிப்போன பிரவீன் குமார் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அபிராமி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியிருக்கிறார்கள். திருமணமாகி 2 அரை ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்து இருப்பதால் இது குறித்து ஆர்டிஓ அதிகாரியும் விசாரணை நடத்தி வருகிறார். அபிராமியின் மரணம் காரணமாக அவருடைய உறவினர்களும் அக்கம்பக்கத்தை சார்ந்தவர்களும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.