fbpx

தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்.. அழைத்துச் சென்றவர் தலைமறைவு…!

மும்பை மலாடு அக்சா கடற்கரை அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் 47 வயது பெண்ணுடன் ஆண் ஒருவர் கடந்த 11 ஆம் தேதி மாலை வந்து தங்கினார். லாட்ஜில் தங்கி இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு சென்ற விடுதி ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து நேற்று காலை பெண்ணுடன் தங்கி இருந்தவர் விடுதியில் இருந்து வெளியே சென்றுவிட்டார். தனியாக இருந்த பெண் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டார். விடுதியில் தங்குவதற்கான நேரம் முடிந்து நெடுநேரம் ஆனதால் விடுதி ஊழியர்கள் கதவை தட்டி உள்ளனர். உள்ளே இருந்து பதில் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு அந்த பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே அப்பெண் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் எனவும், உயிரிழந்த பெண் யார்? அவருடன் உடன் தங்கி இருந்த நபரை பற்றிய விவரம், அகியவை பற்றி காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது.. மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்..

Thu Jul 14 , 2022
நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான […]
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு..!! மாணவர்கள் ஷாக்..!! முழு விவரம் இதோ..!!

You May Like