fbpx

குடித்துவிட்டு வந்து ரகளை செய்த தம்பி… தட்டி கேட்ட அண்ணனுக்கு சரமாரியாக கத்தி குத்து..!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில்‌ வசிப்பவர் லோகநாதன், பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு தங்கதுரை (38) உதயகுமார் (37) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கார் டிரைவராக வேலை செய்து வரும் தங்கதுரை மனைவி ஜெயந்தியுடன் தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மின் வாரிய ஊழியரான உதயகுமார் அதே பகுதி பாரதீஸ்வரர் காலனியில் தனியாக இருக்கிறார்.

இந்நிலையில் பார்வதி நேற்று இரவு தனது இளைய மகன் உதயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது குடித்துவிட்டு போதையில் இருந்த உதயகுமார் தாயுடன் தகராறு செய்து அவரை அடித்துள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய பார்வதி உதயகுமார் தன்னை அடித்துவிட்டதாக தங்கதுரையிடம் கூறியதால், ஆத்திரமடைந்த தங்கதுரை தம்பி உதயகுமார் வீட்டிற்கு சென்று அம்மாவை ஏன் அடித்தாய் என்று கேட்டு சன்னட போட்டுள்ளார். அப்போது திடீரென உள்ளே சென்று கத்தியுடன் வந்த உதயகுமார், அவரது அண்ணனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடியோடினார்.

இதில் கழுத்து மற்றும் வயிற்றில் குத்துப்பட்டு படுகாயமடைந்த தங்கதுரை ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பக்கத்தில் உள்ளவர்கள் தங்கதுரையை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

கள்ளக்குறிச்சி சம்பவம்..! ஜாமீன் வழங்க மாணவியின் தாய் எதிர்ப்பு..! ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி..!

Mon Aug 1 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரிடம் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை […]
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள்? ஸ்ரீமதி மரண வழக்கில் ஐகோர்ட் கேள்வி

You May Like