fbpx

இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை….! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை…..!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கும், நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

நாளை முதல் வரும் 2ம் தேதி வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்த 2️ நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சம் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அடடே நம்ம நதியாவா இது…..? புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்…..!

Thu Mar 30 , 2023
தமிழ் சினிமாவில் கடந்த 1985 ஆம் வருடம் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் நதியா.இந்த திரைப்படத்தை தொடர்ந்து, மந்திரப் புன்னகை, உனக்காகவே வாழ்கிறேன், உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி பாடு நிலாவே, ராஜாதி ராஜா, பூமழை பொழிகிறது என்று அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து பெரியவர்கள் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் […]

You May Like