வருடம் தோறும் தை மாதம் 2ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பகுதியில் இருக்கின்ற திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார். அதன்பிறகு வள்ளுவர் கோட்டத்தை அவர் பார்வையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக விருது வழங்கும் விழா நடந்தது 2023 ஆம் வருடத்திற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா. கு .பொன்னுசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது 2022 ஆம் வருடத்திற்கான பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லாவிற்கு வழங்கப்பட்டது. காமராஜர் விருது ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது. பாரதியார் விருதை ஏ ஆர் வெங்கடாஜலபதி அவர்களும், பாரதிதாசன் விருதை வாலாஜா வல்லவன் உள்ளிட்டோரும் பெற்றனர்.