காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், கள்ளக்குறிச்சியில் மாணவி தற்கொலை விவகாரத்தில், வன்முறை சம்பவத்திற்கு தி.மு.க அரசு வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்றது. அ.தி.மு.க கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்களித்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதவது:-
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை குறித்து ஐகோர்ட்டில் வழக்கு நடந்த போது தமிழகம் அமைதி பூங்கா என்ற நம்பிக்கையை புரட்டிப்போட்டு விட்டது. காவல்துறையினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரின் கட்டுப்பாட்டில் அந்த துறை இல்லை எனவும், மேலும் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவுக்கு தமிழக முதலமைச்சருக்கு சட்டத்தின் நுணுக்கங்கள் தெரியவில்லை.
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி இறந்ததாக கூறப்படும் விவரம் விவகாரம் தமிழக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. உளவுத்துறையின் அறிக்கையை இந்த அரசு பின்பற்றவில்லை என்று தெரிகிறது. ஒருவேளை உளவுத்துறையின் அறிக்கையை முன்னதாக கேட்டு அதனை பின்பற்றி இருந்தால் இந்த வன்முறை சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்க கூடும்.
முதல்வரின் தலைமையில் உள்ள உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்து விட்டது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த அசம்பாவிதம் நடந்தேறி உள்ளது. மூ.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு செயலற்ற அரசு என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம். தி.மு.க தலைமையிலான அரசு எப்போதும் குண்டர்களுக்கும், ரவுடிகளுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்