ஜெயலலிதா உயிரிழந்த நாள் முதல் பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து மெல்ல, மெல்ல ஓரம் கட்டப்பட்டார். ஆனால் ஜெயலலிதா உயிரிழந்த பின்னரும் அந்த கட்சியின் கடிவாளம் அவர்களில் தான் இருந்தது ஆனால் சசிகலாவின் மிரட்டலுக்கு பயந்து அவர் எடுத்த முடிவு தான் தற்போது அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அவரிடம் பணியாற்றியவர் தான் பூங்குன்றன் அவருடைய மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். பூங்குன்றன். ஆனாலும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுகவின் நிலை தொடர்பாக பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூங்குன்றன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பன்னீர்செல்வம் மீண்டும் பரதன் ஆகிவிட்டாரா? அப்படி என்றால் எடப்பாடி பழனிச்சாமி ராமன் ஆகிவிட்டாரா? விட்டுக்கொடுத்து? விட்டுக் கொடுத்து மீண்டும், மீண்டும் தன்னை பரதன் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் என தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பன்னீர் செல்வத்திற்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்பதே இன்றைய தேவையாக உள்ளது. பழனிச்சாமி ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா? எவ்வளவோ விஷயத்தை விட்டுக் கொடுத்த பன்னீர்செல்வம் அவர்கள் நீங்கள் எதை செய்தாலும் ஏற்றுக்கொண்டு வந்தார். உங்களுடைய ஆசை என்னவென்று சொன்னால் பன்னீர்செல்வம் அவர்களிடம் பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் கழக நன்மைக்காக அவர் எதையும் விட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியிருந்தார் பூங்குன்றன்.
இந்த சூழ்நிலையில், பன்னீர்செல்வத்தின் 2வது மகனான ஜெயப்பிரதீப் பூங்குன்றனுக்கு பதிலளிக்கும் விதமாக, வேதனையுடன் முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தர்மத்தின் படி செயல்படும் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பரதனாக விட்டுக் கொடுக்கலாம்.
ஆனால் தர்மத்திற்கு எதிராக செயல்படும் ஒரு சில தலைமை கழக நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இணங்க விட்டுக் கொடுத்ததன் காரணமாக, கடந்த 5 வருடங்களாக கட்சி எவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது என்பது தங்களுக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்திருக்கிறார்.
நம்முடைய அம்மா அவர்கள் ஐயா பன்னீர்செல்வம் அவர்களுக்கு நூற்றுக்கணக்கான பொறுப்புகளை வழங்கி இருக்கிறார்கள், ஆனால் ஒரு முறை கூட பொறுப்பை சரியாக செய்யவில்லை என வாபஸ் பெற்றதாக வரலாறு இல்லை. என்பது பயணங்களுக்கு மேலாக அம்மாவிடம் பணியாற்றிய தங்களுக்கு நன்றாக தெரியும்.
ஐயா பன்னீர்செல்வம் அவர்கள் தனக்கென்று இந்த பதவி வேண்டும், இந்த பொறுப்பு வேண்டும் என தான் சார்ந்த தலைமையிடம் கேட்டு நீங்கள் இதுவரையில் பார்த்திருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதோடு, அவர் வகித்து வந்த பதவிகள் எல்லாம் அவருடைய உழைப்புக்கும், விசுவாசத்திற்கும் கிடைத்தது என்று தங்களது நன்றாக தெரியும் என தெரிவித்திருக்கிறார் ஜெயபிரதீப்.
அதேபோல உழைக்கும் உண்மை தொண்டனுக்கு அங்கீகாரம் என்பது தான் வகிக்கும் பதவியல் இல்லை, அடுத்தவர்கள் கொடுக்கும் மரியாதையான அன்பில் தான் உள்ளது. கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி மிக உயர்ந்த பதவியை அம்மா அவர்கள் ஏற்கனவே வழங்கி விட்டார்கள்.
ஆகவே பன்னீர்செல்வம் விரும்புவது பதவியல்ல கழகம் ஒன்றிணைந்து செயல்பட்டு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதுதான். கழக ஒருங்கிணைப்பாளராக பதவியேற்ற பின்னர் அந்த பதவியில் பன்னீர்செல்வம் சுதந்திரமாக செயல்பட முடிந்ததா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜெயபிரதீப்.
எவ்வளவு இடையூறுகள்? எவ்வளவு குறுக்கீடுகள்? எவ்வளவு சூழ்ச்சிகள்? எவ்வளவு அவமானங்கள்? பொய்யான குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை எழுந்தனர் என்பது தங்களுக்கு நன்றாகவே தெரியும். புரட்சி தலைவி அம்மா அவர்களின் ராணுவ கட்டுப்பாடு உள்ள கட்சியில் முதன்மை தொண்டராக பணிபுரிந்தவர் தான் ஐயா பன்னீர்செல்வம்.
ஆகவே அவரிடம் முழு சுதந்திரத்துடன் கட்சியை கொடுத்து பாருங்கள், கழகம் அசுர வளர்ச்சியுடன் முன்னேறுவதை தாங்கள் கண்கூடாக பார்ப்பீர்கள் கழக வளர்ச்சியை எங்களுடைய லட்சியம் என்று ஜெயப்பிரதீப் தெறிவித்திருக்கிறார்.
ஆனால் அவருடைய இந்த பதிவின் மூலமாக பன்னீர்செல்வம் மறைமுகமாக கட்சியின் தலைமை பொறுப்பு தனக்கு வேண்டும் என்று கேட்டுள்ளாரோ? என்ற சந்தேகம் எழுகிறது.அப்படி மீண்டும் கட்சியின் தலைமை பொறுப்பு தனக்கு வேண்டும் என்று பன்னீர்செல்வம் நினைத்தால் மறுபடியும் அதிமுகவில் பூதாகரம் வெடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது