திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மாவட்ட நேரு யுவகேந்திரா கர்ப்ப விருட்சக நற்பணி மன்றத்துடன் ஒன்றிணைந்து, பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு மழை நீர் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளை திருநெல்வேலி மாவட்ட காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி, தலைமையேற்று தொடங்கி வைத்தார். நீரின்றி என்ற பெயரில் ஓவிய போட்டியும், நாளைய தலைமுறையினருக்கு நீர் என்கின்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், நீர் விட்டு செல்வீரா நீரை என்கின்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டனர்.
இந்தப் போட்டிகளில் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுக் கொண்டனர். ஓவியர் தங்கவேலு, ராமகிருஷ்ணன், திரிபுரசுந்தரி, நீலா ரோஸ், செல்வ மாரிமுத்து, சுபா, பகவதி உள்ளிட்டோர் போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்றுக்கொண்ட எல்லோருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாபநாசம் அரசு கலைக் கல்லூரியின் நூலகர் பாலச்சந்திரன், ஷங்கர், மாரியப்பன், கார்த்திகேயன், உமா சங்கரி, சிராஜ், ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டனர்.