தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் இருக்கிற காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் போட்டி தேர்வுகளில் நடத்தி வருகின்றது. இத்தகைய நிலையில்தான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக வரும் 20 மற்றும் 21 உள்ளிட்ட தேதிகளில் வேளாண் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.
இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.