தமிழகம் மற்றும் அதை ஒட்டி இருக்கும் பகுதிகளில் அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழ அடுக்கு சுழற்சியினால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதுபோல காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழலில், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ள நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திருவண்ணாமலை வேலூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான வழக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.