fbpx

காதல் போதையில் நடந்த விபரீதம்; உடல் மட்டும் தனியாக கிடந்த பெண்.. பெற்றோருக்கு டீயில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து….

உத்தரபிரதேசம், மீரட் பகுதியில் இருக்கும் லிசாடி கேட் அருகே இளம் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடலை மட்டும் காவல்தூறையினர் கண்டெடுத்தனர். இளம் பெண்ணின் உடல் லிசாடி கேட் அருகே உள்ள வாய்க்காலில் வீசப்பட்டு இருந்தது. தற்போது‌ கொலை செய்யபட்ட அந்த இளம்பெண் ஷாலிமார் கார்டனில் வசித்து வந்த, சானியா ரிஹான் என கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலிசார், தற்போது இளம்பெண்ணின் தலையையும் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-

சானியா ரிஹான் (20) தனது பெற்றோருடன் ரிஹான் கார்டனில் வசித்து வந்தார். அந்த பகுதியை சேர்ந்த வாசிம் என்ற வாலிபரை சானியா காதலித்து வந்தார். வாசிமை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக தனது பெற்றோரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு சானியாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வாசிமை சந்திக்க சானியா ரிஹான் அடிக்கடி அவரது பெற்றோருக்கு டீயில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவு சானியா, வாசிமை சந்திக்க செல்ல பெற்றோருக்கு டீயில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.

ஆனால் சானியாவின் தாயாருக்கு சந்தேகம் தோன்றியதால் அன்று இரவு டீ குடிக்காமல் தவிர்த்துள்ளார். அன்று நள்ளிரவு சுமார் இரண்டு மணியளவில் அனைவரும் தூங்கிவிட்டார்கள் என்று நினைத்த சானியா வாசிமை சந்திக்க புறப்பட்டார். அந்த நேரத்தில் அவரது தாயார் அவரை போகவிடாமல் தடுத்தார். இதை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சானியாவின் தந்தையும் தாயும் சேர்ந்து சானியாவை கழுத்தை அறுத்து கொலை செய்து, உடல் மற்றும் தலையை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துள்ளனர்.

Rupa

Next Post

வங்கிகளில் 6000 காலியிடங்கள்.. கடைசி தேதி நெருங்குகிறது.. உடனே அப்ளை பண்ணுங்க..

Sat Aug 20 , 2022
இந்தியா முழுவதும் உள்ள அரசு வங்கிகளில் காலியாக உள்ள 6000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ப்ரோபேஷனரி அதிகாரி (PO) ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறையை வங்கி பணியாளர்கள் நிறுவனமான IBPS விரைவில் முடிக்கவுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 22, 2022 வரை IBPS – ibps.in இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் வங்கி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி: ஆகஸ்ட் 2, 2022விண்ணப்பிக்க கடைசி தேதி: […]

You May Like