fbpx

விழுப்புரம் கடலூரில் முதல்வரின் ஆய்வை தொடர்ந்து அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்….! பரபரக்கும் அதிகாரிகள்…..!

கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஒரு சில திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்த முதலமைச்சர், தேவையற்ற தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தினார். இத்தகைய நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி, வருவாய், காவல் பள்ளிக்கல்வித்துறைகளில் பல அதிரடி பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டனர் இது அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக எஸ். செல்வராணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மா ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அதோடு விழுப்புரம் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோன்று கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலர் ஜி சரஸ்வதிக்கு பதிலாக கோ.கிருஷ்ணபிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதோடு சரியாக செயல்படாத அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக, திட்ட செயல்பாடுகள் மேலும் வேகமெடுக்கலாம் என்று தமிழக அரசு கருதுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது

Next Post

காதலிக்கும்போது உல்லாசம்..!! கணவனுக்கு வந்த வீடியோ..!! விடாமல் துரத்திய இளைஞர்..!! கொலையில் முடிந்த பேச்சுவார்த்தை..!!

Mon May 1 , 2023
தெலங்கானா மாநிலத்தில் தனது காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை அந்த இளைஞர் காதலியின் கணவருக்கே அனுப்பிய பகீர் சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். 24 வயதான இவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதை மகேஷ் யாருக்கும் தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதற்கிடையே, இவர்களின் காதல் வாழ்க்கையில் […]

You May Like