fbpx

திருமணத்திற்கு மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த திருநங்கை…..! தெலுங்கானாவில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்…..!

தெலுங்கானா மாநிலம் மஞ்ச்ரியால் மாவட்டத்தை சேர்ந்த சலூரி அஞ்சலி (21) இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார் இவருடன் பணியாற்றுபவர் பரமேஸ்வரி என்ற பெண் பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி என்ற திருநங்கை சகோதரி ஒருவரும் இருக்கிறார் இந்த நிலையில், திருநங்கை மகேஸ்வரி பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார் இளம் பெண் அஞ்சலிக்கு பரமேஸ்வரி மூலமாக திருநங்கை மகேஸ்வரி அறிமுகமாகி இருக்கின்றார்.

இவர்கள் 3 பேரும் ஒரே பகுதி பணியாற்றி வந்த நிலையில் ஒரே இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார்கள். இத்தகைய நிலையில், திருநங்கை மகேஸ்வரிக்கு அஞ்சலியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது ஆகவே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அஞ்சலியை மகேஸ்வரி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் தனக்கு விருப்பமில்லை என்று அஞ்சலி தொடர்ந்து மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த புதன்கிழமை இதுகுறித்து அஞ்சலி மற்றும் மகேஸ்வரி உள்ளிட்டோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கத்திக்குத்து காயங்களுடன் அஞ்சலி நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது ஒரு புறம் இருக்க, இவர்களுடன் வீட்டு அருகே வசிக்கும் விக்னேஷ் என்ற நபர் அஞ்சலியின் குடும்பத்தினருக்கு போன் செய்து தங்களுடைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை தெரிவித்து இருக்கிறார். ஆகவே அஞ்சலி குடும்பத்தினர் ஊரில் இருந்து கிளம்பி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். அப்போது அஞ்சலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டார்கள்.

ஆனால் இந்த சம்பவம் காரணமாக, மகேஸ்வரிக்கும் கத்திக்குத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. தன்னுடைய மகளுக்கு நேர்ந்த அவலம் காரணமாக, அதிர்ச்சிக்கு உள்ளான அஞ்சலியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் காவல் துறையிடம் புகார் வழங்கினர். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, திருநங்கை மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் இந்த கொலை சம்பவத்தில் அவர்களுடன் சண்டை வீட்டில் வசிக்கும் அஸ்மிர் ஸ்ரீனிவாஸ் என்ற நபர் மீதும் சந்தேகம் உள்ளதாக அஞ்சலியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Next Post

50 சதவீத ஊடக நிறுவனங்கள் மூடல்..!! அரசின் கட்டுப்பாடுகளால் பத்திரிகையாளர்கள் வேலையிழப்பு..!!

Sun Mar 19 , 2023
ஆப்கானிஸ்தானில் தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில், பல காரணங்களுக்காக 53% ஊடகவியலாளர்கள் வேலையிழந்து உள்ளதாகவும், 50% ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”பெரும்பாலான ஊடக ஊழியர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர். ஊடக சமூகம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் ஊடகங்களின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஊடக சமூகத்தின் பாதுகாப்பு சட்டங்கள் இடைநிறுத்தம் ஒரு பெரிய சவாலாக உள்ளது” என்று (ANJU) உறுப்பினர் மஸ்ரூர் லுட்ஃபி கூறியுள்ளார். […]
50 சதவீத ஊடக நிறுவனங்கள் மூடல்..!! அரசின் கட்டுப்பாடுகளால் பத்திரிகையாளர்கள் வேலையிழப்பு..!!

You May Like