fbpx

சென்னை மாநகராட்சியில் இனி அதிரடியை எதிர்பார்க்கலாம்…..! புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்…..!

தமிழ்நாட்டில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் கடந்த 13ஆம் தேதி பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப்சிங் பேடி சுகாதாரத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று அவர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார், அவரை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், கவுன்சிலர் ராஜசேகரன் மற்றும் மாநகராட்சியின் பல்வேறு துறை அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

அதன் பிறகு ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, சென்னை மாநகராட்சியில் 2000-01 காலகட்டத்தில் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் மேயராக இருந்தபோது நான் மாநகராட்சி ஆணையராக பணியாற்றியுள்ளேன். அதற்கு முன்பு கடந்த 1999 ஆம் ஆண்டு துணை ஆணையராக பணியாற்றியிருந்தேன். அப்போது மாநகராட்சியின் பரப்பளவு 176 சதுர கிலோ மீட்டராக இருந்தது தற்சமயம் 426 சதுர கிலோமீட்டர் என இதன் இதன் பரப்பளவு விரிவடைந்து இருக்கிறது. சமீபத்தில் நோய் தொற்று பரவலின்போது சென்னை மாநகராட்சியில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார் ராதாகிருஷ்ணன்.

மேலும் நான் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் உள்ளிட்ட பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் இணைந்து, முதலமைச்சரின் எண்ணங்களை விரைவாக செயல்படுத்துவேன் என்றும், முதலமைச்சரின் வழிகாட்டுதல்கள் முறையாக செயல்படுத்தப்படும் எனவும், பொது மக்களின் அன்றாட குறைகளையும் தீர்க்க பாடுபடுவேன் எனவும், பணியாளர் நலனிலும் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

மழை, வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும் புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த பணிகள் துரிதப்படுத்தப்படும். மாநகராட்சியில் வெளிப்படையான எளிமையான நிர்வாகம் கொண்டுவரப்படும் கள நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Post

கோவையில் பறிபோகும் திமுகவின் இளம் பெண் கவுன்சிலர் பதவி….! காரணம் என்ன….?

Tue May 16 , 2023
கோயமுத்தூர் மாநகராட்சி 97வது வார்டு உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினரான நிவேதா, திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களின் தொடர்ந்து பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே இவர் தன்னுடைய கவுன்சிலர் பதவியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)ன்படி […]

You May Like