தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் எல்லோரும் வங்கிக்கு செல்லாமலே மிக விரைவில் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் யுபிஐ மூலமாகவே செய்து கொள்கின்றனர். இல்லையென்றால் நெட் பேங்கிங்ஐ பயன்படுத்துகிறார்கள் அந்த அளவுக்கு வங்கி பண பரிவர்த்தனை என்பது இணையதளமயமாகிவிட்டது.
upi பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதன் பாதுகாப்பு அம்சத்தை முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும், யூ.பி.ஐ பின் உருவாக்க வேண்டும் ஒரு வேலை உங்களுடைய யுபிஐ பின் நம்பர் மற்றவர்களுக்கு தெரிந்து விட்டால் அதனை உடனடியாக மாற்றி விடுங்கள்.
அப்படி தாங்கள் மாற்றும்போது தங்களிடம் டெபிட் கார்டு இல்லை என்றாலும் யுபிஐ பின் நம்பரை பாதுகாப்பாக மாற்றிக் கொள்ளலாம். தற்போது யூபிஐ பின் நம்பரை டெபிட் கார்டு இல்லாமல் மாற்று எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது தங்களுடைய வங்கியின் மொபைல் ஆப் அல்லது இன்டர்நெட் பேங்கிங் போர்டல் மூலமாக உள் நுழைய வேண்டும்.
உங்களுடைய கணக்கு அமைப்புகளுக்கு சென்று யுபிஐ பின் விருப்பத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய புதிய பின்னை உள்ளிட்டு சரி பார்ப்பிற்க்காக பின்னை மீண்டும் உள்ளிட வேண்டும். சரி பார்த்த பின்னர் யு பி ஐ பின் வெற்றிகரமாக மாற்றப்படும் இதற்கு நடுவே பின்னை மாற்றும்போது தங்களுடைய கைபேசியோ அல்லது கணினியோ அவற்றின் தேடுபொறியை புதுப்பிக்க வேண்டும்.