கடந்த 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வமகள் மெகா தொடர் மூலமாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் பிரபல நடிகை வாணி போஜன் இந்த மெகா தொடர் மூலமாக தமிழகம் முழுவதும் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலமாக வெள்ளி திரைக்கு வருகை தந்தார். சமீபத்தில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான நிழல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்ததாக லவ், ஊர்குருவி, பகைவனுக்கு அருள்வாய் போன்ற பல திரைப்படங்களை தன் வசம் வைத்திருக்கிறார் வாணிபோஜன்.
நடிகை வாணிபோஜன் முதன்முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆஹா, மாயா, தெய்வமகள் உள்ளிட்ட நெடுந்தொடர்களில் நடித்து தான் ரசிகர்களிடையே பிரபலமானார். ஆனால் அப்படி அவர் ரசிகர்களிடையே பிரபலம் ஆவதற்கு முன்பே எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நடிகை வாணிபோஜனா இது? ஆள் அடையாளமே தெரியவில்லையே என்று தெரிவித்து வருகிறார்கள்.