டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ஆம் வருடம் இந்தியா தடை விதித்தது. இதைத்தொடர்ந்து டிக்டாக்கிற்கு மாற்றான இந்திய செயலிகள் பிளே ஸ்டோரில் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் டிக்டாக் செயலிக்கு மாற்றாக தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் அம்சத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்பது வீடியோ, மியூசிக் ரீமிக்ஸ் போன்ற சேவைகள் ஆகும்.
இது இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரிஸ் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ரீல்ஸில் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன்படி இன்ஸ்டாகிராமில், இனி நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை தொகுத்து அதற்கு பின்னணியில் பாடல்களை ஒலிக்கவைத்து ரீல்ஸாக பதிவிட முடியும். இந்த புதிய அம்சத்தை அந்நிறுவனம் பயன்பாட்டுக்கு கொண்டுவர் உள்ளது.
தற்போது ரீல்ஸில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் இனி வரப்போகும் புதிய அம்சத்தின் மூலம் போட்டோக்களையும் வீடியோவாக எடிட் செய்து பதிவிடலாம். இதற்காக விதவிதமான டெம்ப்ளேட்களையும் பேஸ்புக் நிறுவனம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.