திமுக என்ன தான் ஆளும் கட்சியாக இருந்து ,அதிகாரத்தை தன் கையில் வைத்திருந்தாலும் அதிமுகவில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சற்று அஞ்சி நடுங்கி கொண்டு தான் இருக்கிறார் என்று தகவல் வெளியாக தொடங்கியுள்ளது.
அதில் முதல் இடத்தில் இருப்பவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற அடுத்த கணமே திமுகவினரிடையே பயம் தொற்றிக் கொண்டதாக சொல்லப்பட்டது.
அடுத்தபடியாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், இவர் திமுகவை விமர்சனம் செய்தாலும் சரி, அல்லது தினகரனை விமர்சனம் செய்தாலும் சரி அவரால் விமர்சிக்கப்படுபவர்கள் கடுமையாக தாக்கி பேசப்படுவார்கள். அந்த வகையில், முன்பே ஒரு முறை கடுமையாக டிடிவி தினகரனை அவர் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், அதிமுகவின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் நடிகைகளின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த உதயநிதி, நயன்தாரா தனக்கு கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக, தற்கொலை செய்ய முயற்சி செய்தவர்.
அவர் இன்று தமிழகத்தின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படி தான் நாங்கள் நடப்போம் என்று திமுகவின் பொன்முடி தெரிவித்தது தொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், நயன்தாராவிற்கு போய் ஃபீடிங் பாட்டில் வாங்கி கொடு 2 குழந்தைகள் இருக்கிறது என்று பேசியுள்ளார் சிவி சண்முகம்.
அத்துடன், ஸ்டாலின் ஒரு கைப்பாவை, ஸ்டாலின் ஒரு பொம்மை, ஒரு ரிமோட் கண்ட்ரோல் அந்த பொம்மைக்கு எதுவும் தெரியாது. யாராவது கி கொடுத்து விட்டால் ஆடும், உட்கார சொன்னாலும் உட்காரும், நில் என சொன்னால் நிற்கும், பேன்ட் குள்ளே கை போடு என்று சொன்னால் கையை போடும், அவர் ஒரு பொம்மை முதலமைச்சர் என்று விமர்சனம் செய்திருக்கிறார் சண்முகம்.
மேலும் பேசிய சண்முகம், யார் இந்த அரசை இயக்குவது? அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தரக்குறைவாக தமிழக முதலமைச்சரின் குடும்பத்தை விமர்சனம் செய்தது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னாள் அமைச்சராகவும், தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர், முதல்வரின் குடும்பத்தை இவ்வளவு மோசமாக விமர்சனம் செய்வது அரசியல நாகரீகம் அல்லாதது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.