fbpx

குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட வெளியூர் சென்ற தம்பதிகளுக்கு ஏற்பட்ட சோகம்!

பொதுவாக புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட் பண்டிகைகள் வந்துவிட்டால் வேலை நிமித்தமாக எங்கு சென்று இருந்தாலும், இந்த பண்டிகை கொண்டாட்டத்தின் போது மட்டும் எல்லோரும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.

வேறு சிலர் சொந்த ஊர்களில் இருந்து பண்டிகைகளை கொண்டாடுவதற்காக வேறு சில ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த குடும்பத்தினர் ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கி இருந்தபோது, அவர்களுடைய 6 வயது குழந்தை நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன். சென்னையில் இருக்கின்ற ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய குடும்பம் உள்ளிட்ட இவரது நண்பர்கள், குடும்பத்தைச் சார்ந்தவர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஆரோவில் அருகே இருக்கின்ற பூத்துறையில் தனியார் ரிசார்ட் ஒன்றிற்கு நேற்று வந்தனர். அங்கே வங்கி அவர்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு பரந்தாமனின் ஆறு வயது பெண் குழந்தை சஹானா அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார்.

எதிர்பாராத விதத்தில், நீச்சல் குளத்தில் விழுந்த சகானாவை பார்த்த குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வாகனம் மூலமாக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 6 வயது பெண் குழந்தை சகானா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இது தொடர்பாக கிடைத்த தகவலினடிப்படையில் ஆரோவில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அந்த ரெசாரத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது சென்னையில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக புதுவை வந்த குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குழந்தையை இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

மீண்டும் தமிழகத்தை மிரட்டும் மழை! நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை!

Mon Jan 2 , 2023
ஒரு வழியாக தமிழகத்தில் மழை ஓய்ந்தது. 2022 ஆம் ஆண்டுடன் மழை தொந்தரவு முடிந்துவிடும் என்று தமிழக மக்கள் நினைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது, இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் வறண்ட வானிலை இருக்கும். எனவும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் அதிகாலை […]
தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!

You May Like