fbpx

விடைபெற்றது 2022! கூடவே செல்லும் மற்றொரு முக்கிய நபர் யார் தெரியுமா?

இன்னும் சில மணி நேரங்களில் 2022 ஆம் ஆண்டு நமக்கு விடை கொடுக்க காத்திருக்கிறது. அதேபோல மற்றொன்றும் தமிழக மக்களுக்கு விடை கொடுக்க தயாராகிவிட்டது.

வட தமிழக உள் மாவட்டங்களில் வரும் 2ம் தேதி வரையில் அதிகாலை சமயத்தில் பனி மூட்டம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று தமிழக தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், வட தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலையை இருக்கும் எனவும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் அதிகாலை சமயத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல நாளையும், நாளை மறுநாளும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலையே இருக்கும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், அதிகாலை சமயங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு வரும் 3ம் தேதி மற்றும் 4ம் தேதி உள்ளிட்ட தினங்களில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸிலிருந்து 32 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Next Post

தனது கணவருக்கு விலையுயர்ந்த பரிசை வழங்கிய ஆல்யா மானசா! அடேங்கப்பா இவ்வளவு காஸ்ட்லியா?

Sat Dec 31 , 2022
விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பல பிரபலங்கள் நிஜ வாழ்விலும் ஜோடி சேர்ந்த வரலாறு அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிகழ்வானது முதன் முதலில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்த ஜோடிகளில் தொடங்கி தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜா, ராணி என்ற தொடரில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா உள்ளிட்ட இருவரும் அந்த தொடரை நடித்துக் கொண்டிருக்கும் […]
கால் வைக்குற இடமெல்லாம் கண்ணி வெடியா இருக்கே..!! நடித்தால் அவுங்க கூடதான் நடிப்பேன்..!! அடம்பிடிக்கும் நடிகர்..!!

You May Like