தமிழகத்தில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச் உள்ளிட்ட மாதங்களில் வெயில் தான் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் எதிர்வரும் 6 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.