விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் வருடம் தமிழில் தொடங்கப்பட்டது. அதோடு அந்த தொலைக்காட்சியில் டி.ஆர்.பி யை ஏற்றுவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ஆனாலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக அந்த டிவியின் டிஆர்பி வெகுவாக அதிகரிக்க தொடங்கியது. அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினர் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரையில் 6 சீசன்கள் முடிவடைந்து இருக்கின்ற நிலையில், 7வது சீசன் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
வழக்கமாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் ஆரம்பமாகும். ஆனால் இந்த நிகழ்ச்சியை நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தான் ஆரம்பமாகும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த அறிவிப்பு பிக் பாஸ் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.