தமிழகத்தில் இந்த வருடத்திற்கான தேர்வுகள் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட சூழ்நிலையில், தற்சமயம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ஆகவே 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எதிர்வரும் 28ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது.
ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்களுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தவிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் பள்ளிகளில் எந்த விதமான மாற்றங்களை செய்ய வேண்டும்? அரசு பள்ளிகளை தரமும் உயர்த்துவதற்கு எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகளை எப்போது திறக்க வேண்டும்? அதோடு பொது தேர்வு முடிவுகள் வழியாகும் தேதி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது