இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏ.கே 62 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று ஒரு வருடத்திற்கு முன்னரே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்து இருக்க வேண்டிய இந்த திரைப்படம் ஆரம்பிக்காமல் தாமதமாகி வந்தது. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ஏ கே 62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டதாக தகவல் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
மகிழ் திருமேனி கேரியரில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அஜித் சாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த திரைப்படத்தை ஒரு ரசிகனாக நானும் பார்த்து ரசிக்க காத்திருக்கிறேன் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.