fbpx

மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அண்ணாமலை மௌனம் காப்பது ஏன்?.. கே எஸ் அழகிரி கேள்வி..!

சின்ன சேலம் மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்காதது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்திப்பில் கூறியிருப்பதாவது, கனியாமூர் பள்ளி குழந்தையின் மரணத்திற்கு மட்டும் ஏன் அவர்கள் கருத்து கூறவில்லை. ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. முறையான நீதி விசாரணை வேண்டும் என்று கேட்கவில்லை. எதற்காக நீதிமன்றம் அவர்கள் செல்லவில்லை.

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன?.. எதற்காக பாரதிய ஜனதா கட்சி அவ்வாறு நடந்து கொள்கின்றனர். என்ன காரணத்திற்காக ஆர்.எஸ். எஸ் மவுனமாக இருக்கிறார்கள். என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் அறிய விரும்புகிறது. என அவர் கூறியுள்ளார்.

Rupa

Next Post

வடிவேலு தன்னை பற்றி எவ்வளவோ விமர்சித்திருந்தாலும்.. விஜயகாந்த் செய்த பெருந்தன்மையான செயல்..

Thu Sep 1 , 2022
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நடிகர்களில் வடிவேலு முக்கியமானவர்.. வடிவேலுவின் இந்த வளர்ச்சிக்கு நடிகர் விஜயகாந்தும் முக்கிய காரணம்.. ஆரம்பக்காலத்தில் வடிவேலுவுக்கு நிறைய உதவிகளை விஜயகாந்த் செய்துள்ளார்.. வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த வடிவேலுவுக்கு தனது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது விஜய்காந்த் தான்… அதற்கு பின்னரே வடிவேலுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பின்னர் […]

You May Like