சென்னை திருவொற்றியூரை சேர்ந்த கூலி தொழிலாளி துரை(56), இவருடைய மனைவி இந்திராணி( 48) தேரடி சந்திப்பில் இருக்கின்ற ஒரு பேக்கரியில் பணியாற்றி வந்தார் இந்த நிலையில் கணவர் துரை போதைக்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
கணவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததை மனைவி கண்டித்து ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இருவருக்கும் இடையில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த விவகாரத்தை குறிப்பிட்டு நேற்று காலை கணவன் ,மனைவிக்கு இடையில் மறுபடியும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் தகராறு முற்றியதால் துரை உலக்கையை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் இந்திராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் காவல்துறையினர் இந்திராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மனைவியை கொலை செய்த துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.