இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்த மதமாற்ற பிரச்சினை மிகப்பெரிய பிரச்சனையாக திகழ்கிறது.உலக அளவில் இஸ்லாமிய நாடுகள் அதிகம் இருப்பதால், தங்களுடைய மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு அந்த நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர்.மேலும் இதற்காகவே பல நாடுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நிதி உதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் மதமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னுடைய மனைவியை கணவன் அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் சந்த் முகமது என்ற நபர் தன்னுடைய மத அடையாளத்தை மாற்றி வைத்துக் கொண்டு தன்னை ஒரு இந்து மதத்தவரை போல காட்டிக் கொண்டு தன்னுடைய பெயர் சானி மவுரியா எனவும், தெரிவித்து இந்து பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அந்த பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாற சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தன்னுடைய மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியத்துடன், சிகரெட்டால் சூடு வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் சூடான எண்ணெயை அந்தப் பெண்ணின் மீது ஊற்றி சித்திரவதை செய்திருக்கிறார். அத்துடன் தன் மீது காவல்துறையில் புகார் வழங்கினால் தன்னுடைய உறவினர்களை வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விடுவேன் என்றும் அந்த பெண்ணை அவர் மிரட்டி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது அந்தப் பெண்ணை பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறார். அந்தப் பெண்ணின் கணவர் அந்தப் பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, சந்த் முகமது அந்த பெண்ணின் வயிற்றில் அடித்ததில், அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் அந்தப் பெண்மணி ஒரு மையத்தால் காப்பாற்றப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் மிக விரைவில் தனக்கு ஏற்பட்ட கொடுமைகள் தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிகிறது.