காதல் திருமணம் என்றாலே பெற்றோர்களது எதிர்ப்பை மீறி தான் இளைய தலைமுறையினர் அதனை செய்து கொள்ள நேர்கிறது.ஆனால் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தற்காலத்து இளைஞர்களுக்கு வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லை என்று தான் என சொல்லப்படுகிறது.
இளைய தலைமுறையினர் அப்படி இருப்பது உண்மைதான் ஆனால் அனைவரும் அப்படியே இருப்பதில்லை. ஒரு சாரார் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கையை எப்படி நகர்த்திச் செல்வது என்று தெரியாமல் ஏதேதோ செய்தாலும், பல இளம் தலைமுறை யினர் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று யோசித்து தான் செயல்படுகிறார்கள்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் வினித். இவர் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நவீன் பட்டேல் என்ற நபர் கடந்த 20 வருடங்களாக மரக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் கிருத்திகாவும், வினித்தும் பள்ளி பருவம் முதலே காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், கடந்த மாதம் 27ஆம் தேதி வினித்தும், கிருத்திகாவும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் திருமணம் செய்து அதனை பதிவு செய்து கொண்டனர். ஆனாலும் இவர்களின் திருமணத்தில் பெண் மீட்டருக்கு சம்மதம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தும் காவல் நிலையத்தில் வினித், கிருத்திகா தம்பதியினர் ஏற்கனவே புகார் வழங்கியிருந்தனர்.
ஆனாலும் இந்த புகார் மீது காவல்துறையினர் எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளாததால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் வினித் புகார் வழங்கியிருந்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு விசாரித்ததால் புகாரை திரும்பப்பெறுமாறு வினோத்திற்கு காவல்துறையினர் அழுத்தம் கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் மதியம் குத்துக்கல்வலசை பகுதியில் இருக்கின்ற தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வினீத், கிருத்திகா தம்பதியினர் சென்று வினீத்தின் பெற்றோர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது யாரும் எதிர்பாராத விதத்தில், அங்கு வந்த கிருத்திகாவின் பெற்றோர், உறவினர்கள் எல்லோரையும் தாக்கி விட்டு கிருத்திகாவை அங்கிருந்து வலு கட்டாயமாக கடத்திச் சென்றனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் எதுவும் வழங்கப்படாத நிலையில், கிருத்திகாவை அவருடைய உறவினர்கள் தூக்கிச் செல்லும் காட்சிகள் மட்டும் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.