நாம் நான் நாள்தோறும் நூதனமான முறையில் கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் நபர்களைப் பற்றி செய்தித்தாள்களில் செய்திகளை படித்து வருகிறோம்.நாள்தோறும் யாரும் எதிர்பாராத விதத்தில், வினோதமான சம்பவம் ஏதாவது ஒன்று நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
அந்த விதத்தில் கோவை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளும், தொழில் நிறுவனங்களும் இயங்கி வருகின்றனர். ஆகவே கோவை மாநகரம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும் ஆகவே வேலைக்கு செல்லும் பெண்களும், கல்லூரி மாணவர்களும் தனியார் விடுதலில் தாங்கி படித்து வருகின்றனர். கோவையில் தனியார் மகளிர் விடுதிகளும் அதிக அளவில் இயங்கி வருகின்றனர்.
அந்த விதத்தில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மகளிர் விடுதியில் மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் ஒருவர் தங்குவதற்காக சென்று இருக்கிறார். அப்போது அந்த பெண் வருமானவரித்துறையில் வேலை பார்ப்பதாகவும், ஐஏஎஸ் படிப்பிற்காக கோச்சிங் சென்டர் செல்வதற்காக இங்கே வந்திருப்பதாகவும் தெரிவித்து தங்குவதற்கு அறை கேட்டுள்ளார். அவர் தெரிவித்ததை உண்மை என்று நம்பிய விடுதியின் காப்பாளர் கார்த்தியாயினி, அவருக்கு தங்குவதற்காக அறை ஒதுக்கி தந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான் ராஜலட்சுமி அந்த விடுதியில் இருந்த சக பெண்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 2 மடிக்கணினிகளையும் எடுத்துக்கொண்டு திடீரென்று தலைமறைவாகிவிட்டார். ஆகவே விடுதியின் காப்பாளர் கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் வழங்கியுள்ளார்.
அதனை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதோடு தலைமறைவான ராஜலட்சுமியை தேடி கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர் மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.