தமிழ் திரை உலகில் பொருத்தவரையில் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த விதத்தில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து சுமார் 7 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது காதலிக்க தொடங்கினார்கள், பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இத்தகைய நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் ஜெய் பீம் திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்தது. இதில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.
அப்போது மேடையில் விருதை வாங்கிய நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா தொடர்பாக உருக்கமாக பேசியிருக்கிறார் இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, இந்த விருதை நான் ஜோதிகாவிற்கு அர்ப்பணிக்கிறேன் எனக்காக அவர் பல தியாகங்களையும் செய்து இருக்கிறார்.
குழந்தைகளை அவர் பார்த்துக் கொண்டு என்னை நடிக்க வைத்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக என் மனைவி இருக்கிறார் என்று சூர்யா தெரிவித்துள்ளார். அதோடு என் வாழ்வில் நடைபெறும் எல்லாவற்றிலும் ஜோதிகா ஒரு பகுதியாகவே இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் நடிகர் சூர்யா.