தற்கால இளைய தலைமுறையினர் பெண்களை காதலிப்பதாக சொல்லி டேட்டிங், லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று பலவாறு அவர்களுடன் தாங்கள் விரும்பியபடி இருந்து விட்டு, இறுதியில் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுகிறார்கள்.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான் என்னதான் உருகி, உருகி காதலித்தாலும் கடைசியில் இளைஞர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டால் பெண்களை கழட்டி விடுவதையே சிலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காதலிக்கு உயிருடன் தீ வைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் சாலையில், பனைபாளையம் என்ற பகுதியில் ஒரு இளம் பெண் உடலில் உடைகள் இன்றி உடல் முழுவதும் தீயால் எரிந்த நிலையில், காப்பாற்றுங்கள் என்று அலறியவாரே காட்டுப்பகுதியில் இருந்து ஓடோடி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மக்கள் அந்த இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தியின் மூலமாக, அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இளம் பெண் தற்கொலை செய்ய முயற்சி செய்தாரா? அல்லது அவரை ஏதாவது ஒரு காரணத்திற்காக யாராவது கொலை செய்ய முயன்றார்களா? என்ற கோணத்தில் விசாரிக்க தொடங்கினர்.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் அந்த இளம் பெண் ராயர் பாளையம் பகுதியைச் சேர்ந்த பூஜா (19) என்று தெரியவந்துள்ளது அதோடு, அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ் என்ற வாலிபரும், பூஜாவும் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்ததும் கடந்த 8 மாத காலமாக இருவரும் காதலித்து வந்ததும் இந்த விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் லோகேஷனை மிக தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் லோகேஷ் தனக்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்து மயக்கம் வருவதாக சொல்லி, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து விட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்தவுடன் அரசு மருத்துவமனைக்கு விரைந்த பல்லடம் டிஎஸ்பி சௌமியா மற்றும் காவல்துறையினர் லோகேஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கு நடுவில் உடலில் தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம் பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் லோகேஷிடம் தங்களுடைய தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.