தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருக்கின்றனர்.இது போன்ற சம்பவங்களை கேள்விப்படும் போதெல்லாம் சாதாரண பாமர மக்கள் கொதித்தெழ செய்கிறார்கள்.
ஆனால் அவர்களால் கோபப்பட மட்டும்தான் முடியுமே தவிர இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அவர்களால் எதுவும் செய்ய முடியாது.ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் இது போன்ற நபர்களை நிச்சயமாக தண்டிக்கலாம்.
இருந்தாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய சுயலாபத்தை மட்டுமே பார்க்கிறார்களே தவிர இது போன்ற சமூக விரோதிகளை தண்டிப்பதில்லை.அந்த வகையில், அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு இளைஞருக்கு 21 வருடங்கள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்தைச் சார்ந்த வினோத்குமார் என்ற வாலிபர் அதே ஊரை சேர்ந்த 15 வயதான ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் பெற்றோர் சென்ற 2021 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
அந்த சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரினை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வினோத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமார் அவர்களுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2,01000 ரூபாய் அபராதமும் மிதித்து நீதிபதி ஆனந்தன் உத்தரவு பிறப்பித்தார்.அதோடு பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு அவர் உத்தரவு பிறப்பித்தார்.