பொதுவாக பெண்கள் என்றாலே ஆண்களுக்கு ஒருவித போதை பொருளை போல நினைத்துக் கொள்கிறார்கள்.
பெண்கள் என்பவர்கள் சமூகத்தில் மதிப்புடன் நடத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களை ஆண்கள் போதை பொருளாக எண்ணி அவர்களிடம் தங்களுடைய இச்சையை மட்டும் தீர்த்துக் கொள்ள நினைப்பது வேதனை அளிக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருக்கின்ற தட்டாரப்பட்டியில் 2 இளம் பெண்கள் தங்களுடைய வீட்டின் முன்பிருந்த சிறிய அளவிலான நீர் தேக்க தொட்டியில், நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் இளம் பெண்கள் குறைப்பதை தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாக இளம் பெண்கள் தங்களுடைய உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இந்த இளம் பெண்கள் தெரிவித்ததை கேட்டு ஆத்திரமடைந்த அவர்களுடைய உறவினர்கள், அந்த இளைஞரை தட்டிக் கேட்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் அவர்களிடமிருந்து தப்பியோடிவிட்டார். தப்பி சென்ற அவர், தன்னுடைய சொந்த ஊரான மாரம்பாடிக்கு சென்று 10க்கும் அதிகமான இளைஞர்களை அழைத்து வந்து, விறகு கட்டையால் பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கியதால் 3 ஆண்கள், 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
விறகு கட்டையால் அவர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்ற நிலையில், வேடசந்தூர் காவல்துறையினர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.