கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி செம்மப்ப நாயக்கன் பாளையத்தில் வசித்து வருபவர் ரமேஷ் (27). இவர் சோமனூர் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டுக்கு அருகே இருந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை பேசி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை கர்ப்பம் ஆக்கியுள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரமேஷ் குமாரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் விசாரணையில் சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ரமேஷை, குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.